ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்த யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொட!

#SriLanka #Colombo #UnitedKingdom #LANKA4 #Court #HighCourt #YoshithaRajapaksa
Abi
33 minutes ago
ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்த யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொட!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர்கள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு நேற்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இருவரும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிக்காக இணைத்ததன் மூலம் ஊழல் குற்றம் புரிந்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இருவருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

விசாரணையின்போது, குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் தாம் குற்றமற்றவர்கள் என மன்றில் தெரிவித்தனர்.

இதன்போது, வழக்கின் சாட்சிய ஆவணங்களின் பிரதிகள் தமக்கு வழங்கப்படவில்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த ஆவணங்களை அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னர் வழங்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, சாட்சியங்களைப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கமைய, 2006ஆம் ஆண்டு கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற கடற்படை கொமடோர் ரஞ்சித் பிரேமரத்னவிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!