எல் நினோ தாக்கம் – உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

#India #SriLanka #prices #Food #LANKA4 #ElNINO
Mithra
15 minutes ago
எல் நினோ தாக்கம் – உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

இந்தியாவில் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாற்றுச் சந்தைகள் ஊடாக விநியோகத்தைத் தொடர இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இறக்குமதி செய்யப்படும் சில காய்ந்த மிளகாய் தொகுதிகளில் ஈரப்பதம் 13 முதல் 14 வீதம் வரை காணப்படுவதால் அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை தர நிர்ணய விதிமுறைகளின்படி, இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாயின் ஈரப்பதம் 12 வீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இதனால் சந்தையில் உண்மையான தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளே தாமதத்திற்குக் காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், விநியோகப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் நியாயமற்ற வகையில் விலைகளை அதிகரித்தால் அரசாங்கம் தலையிடும் என்றும், தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!