குருநாகலில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது!
#SriLanka
#ARREST
#Police
#Investigation
#drugs
#LANKA4
#kurunagala
Mithra
32 minutes ago
குருநாகல் - மாஹோ காவல்துறை பிரிவுக்குட்பட்ட எலவக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 771 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 16 கிராம் 770 மில்லிகிராம் ஹெரோயினும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாஹோ காவல் நிலைய அதிகாரிகளுக்கு நேற்று (21) கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் 44 வயதுடைய நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பெண் 45 வயதுடைய பதுக்க பகுதியைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாஹோ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.