புத்தளத்தில் மர்மமான முறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Death
#Police
#Investigation
#LANKA4
Mithra
24 minutes ago
புத்தளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகவில்லு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றிலிருந்து நேற்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.