INDvsWI - மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

#India #LANKA4 #T20 #Cricket #westIndies #L4
Prasu
2 hours ago
INDvsWI - மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய வருகிறது.

அந்தவகையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது T20 போட்டி மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 223 ஓட்டங்கள் குவித்தது. 

இந்திய அணி சார்பில், அபிஷேக் 69 ஓட்டங்களும் இஷான் கிஷன் 37 ஓட்டங்களும் குவித்தனர். 

அதனை தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

 வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில், பூரன் 42 ஓட்டங்களும் ஹெட்மயர் 43 ஓட்டங்களும் குவித்தனர். 

இறுதியில், இந்திய அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!