அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவி பிள்ளைக்கு நடிகர் கமல் வாழ்த்து
2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு பிரபல நடிகர் கமல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், “சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார்.
என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்” என்று கூறியுள்ளார்.