INDvsWI - இரண்டாவது T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

#India #LANKA4 #T20 #Cricket #westIndies #L4
Prasu
1 hour ago
INDvsWI - இரண்டாவது T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய வருகிறது.

அந்தவகையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது T20 போட்டி ஜார் கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், சஞ்சு சாம்சன் 82 ஓட்டங்களும் இஷான் கிஷன் 43 ஓட்டங்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 40 ஓட்டங்களும் குவித்தனர்.

அதனை தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில், ஷாய் ஹோப் 102 ஓட்டங்களும் ரூதர்போர்டு 84 ஓட்டங்களும் குவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!