தாராபுரம் மற்றும் மதுராந்தக இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி

#India #Election #Tamil Nadu #LANKA4 #Vijay #L4 #TVK
Prasu
1 hour ago
தாராபுரம் மற்றும் மதுராந்தக இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி

தமிழகத்தின் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் சத்யபாமா 66841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 57370 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் சத்யபாமா 9471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகள் பெற்றார். இதனால் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!