SLvsPAK - முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி தோல்வி

#SriLanka #Pakistan #LANKA4 #T20 #Cricket #L4
Prasu
2 hours ago
SLvsPAK - முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி தோல்வி

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, பாகிஸ்தான் மாறும் இலங்கை இடையேயான முதல் T20 ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணி சார்பில், லஹிரு உதார 91 ஓட்டங்களும் கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களும் குவித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில், பர்ஹான் 89 ஓட்டங்களும் சடாகட் 50 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!