பிரான்ஸ் மாணவர் போராட்டம் - அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி
பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய மிகவும் மோசமான நிலையில் உள்ள உயர்நிலைப் பாடசாலைகளுக்கு 3,000 மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் தொலைகாட்சியில் பேசிய கல்வி அமைச்சர் எட்வர்ட் ஜெஃப்ரே, சுமார் 3,700 உயர்நிலைப் பாடசாலைகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 114 பாடசாலைகளில், பணிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு உறுதியளித்த நிலையிலும் பிரான்சில் போராட்டங்கள் தொடர்கின்றன.
இப்போராட்டங்களில் 71,500 பேர் பங்கேற்றதாகவும் அவர்களில் காவல்துறையினர் 500க்கும் மேற்பட்டோரைத் தடுத்து வைத்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.