5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு வரிச் சலுகை மறுப்பு – இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

#SriLanka #Bank #LANKA4 #Tax
Mithra
23 minutes ago
5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு வரிச் சலுகை மறுப்பு – இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

500,000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அனுமதிக்கப்பட்ட வங்கி மற்றும் மின்னணுக் கட்டண முறைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்தால், வரிச் சலுகைகள் பாதிக்கப்படக்கூடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, ஒரே நாளில் அல்லது ஒரு தனிப்பரிவர்த்தனையில் அல்லது ஒரே நிகழ்வுடன் தொடர்புடைய பல பரிவர்த்தனைகளில் 5 இலட்சம் ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை உரிய முறையற்ற வகையில் செலுத்தினால், அந்தச் செலவுக்கான வரி விலக்கு மறுக்கப்படுவதுடன், சொத்தின் கொள்வனவுச் செலவாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

உதாரணமாக, ஒரு வர்த்தகர் 10 இலட்சம் ரூபாவை ரொக்கமாகச் செலுத்தினால், அந்தத் தொகையை வரிக்கழிவுக்குரிய செலவாகக் கோர முடியாது. 

இதனால் வரிக்குட்பட்ட இலாபம் அதிகரித்து மேலதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அதேபோன்று, காணி மற்றும் சொத்துக்களைக் கொள்வனவு செய்யும்போது உரிய கட்டண முறைகளைப் பின்பற்றாவிட்டால், எதிர்காலத்தில் சொத்தை விற்பனை செய்யும்போது அதன் கொள்வனவுச் செலவை வரிக் கணக்கீட்டில் கோருவதிலும் சிக்கல் ஏற்படலாம்.

கணக்கில் செலுத்தப்பட்ட பணம், கணக்கு ஊடான மின்னணுக் கொடுப்பனவுகள், கணக்குப் பெறுநருக்கான காசோலை, வங்கி வரைவோலை மற்றும் கடன், பற்று அட்டைகள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொகைப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் உரிய வங்கி ஆவணங்களையும் கொடுப்பனவுச் சான்றுகளையும் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!