கோவையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை அதிகாரி கைது

#India #ARREST #Pakistan #LANKA4 #Navy #Spy #L4
Prasu
1 hour ago
கோவையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை அதிகாரி கைது

கோவையில் அமைந்துள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்காக வந்த 31 வயதான பிரதீப் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரியிடம் இந்திய கடற்படையின் ரகசிய பாதுகாப்புத் தகவல்களை அவர் கசியவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆந்திரப் பிரதேச காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி, இந்திய கடற்படையின் விசாகப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார். 

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஒரு வாரமாக அவர் அங்கு தங்கியிருந்தார்.

இந்நிலையில், சமூக ஊடகம் வாயிலாக பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளி ஒருவர் பிரதீப் முகர்ஜியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

அவரிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் தொடர்பான தகவல்களை பிரதீப் முகர்ஜி பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!