INDvsSL - முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

#India #SriLanka #Test #Lanka4 #Cricket #L4
Prasu
3 hours ago
INDvsSL - முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய அணி சார்பில், தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களும் கே.எல். ராகுல் 82 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

சோனல் தினுஷ 100 ஓட்டங்களும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ரிஷப் பண்ட் 66 ஓட்டங்களும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களும் பெற்றுத் தந்தனர். 

இறுதியில், 372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் ஐந்தாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களும் தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களும் பெற்றுக் கொண்டனர்.

இதன் மூலம், இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4