'டேர்டெவில்' கதை இதுதான்! - ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

#India #Cinema #Tamil Nadu #family #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
'டேர்டெவில்' கதை இதுதான்! - ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டேர்டெவில்’ திரைப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "ஜிபியூ (GBU) போல இன்னொரு திரைப்படம் எடுக்க முடியாது. அதேவேளையில் ‘டேர்டெவில்’ திரைப்படம் GBU போன்று இருக்காது. 

இது முழுக்க முழுக்க குடும்பங்கள், சிறுவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படியான திரைப்படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் அஜித் குமார் அளித்த ஊக்கம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட அவர், "தன் வாழ்க்கையின் மிகக் கடினமான தருணத்தில் அஜித் சாரைச் சந்தித்தேன்.

அப்போது அவர், ' உன்னால் முடியும், உன்னிடம் ஏதோ ஒன்று உள்ளது' என்று கூறி எனக்கு ஊக்கம் அளித்தார். 

அவர் அளித்த அந்த ஊக்கமே என்னை ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை எடுக்க வைத்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!