அன்று பார்க்கக் கூட முடியாத ஏக்கம்... இன்று சூர்யாவுக்கே ஜோடி! - மமிதா பைஜு நெகிழ்ச்சி.

#India #Cinema #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
அன்று பார்க்கக் கூட முடியாத ஏக்கம்... இன்று சூர்யாவுக்கே ஜோடி! - மமிதா பைஜு நெகிழ்ச்சி.

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்துள்ளமை குறித்து நடிகை மமிதா பைஜு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

மலையாளத்தில் வெளியான "பிரேமலு" திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த "ஜனநாயகன்" திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.

தற்போது இந்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் கொச்சியில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகை மமிதா பைஜு, கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சூர்யா கொச்சிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.

அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என விரும்பினேன். 

இருப்பினும், சிறுவயது மாணவி என்பதாலும் கோட்டயத்தில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்வது சிரமம் என்பதாலும் எனது பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை.

ஆனால், எனது சகோதரர் கொச்சி சென்று அந்நிகழ்வில் பங்கேற்றதுடன், நடிகர் சூர்யாவுடன் நிழற்படமும் எடுத்துக்கொண்டார். 

அந்தப் நிழற்படத்தைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது.

ஆனால், காலம் இன்று எவ்வளவு மாறிவிட்டது! அன்று நேரில் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடைக்காத நிலை மாறி, இன்று அவரது திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளமை கடவுளின் ஆசீர்வாதமே எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!