யாழில் படகு விபத்து - 2 பேர் உயிரிழப்பு; பலர் கவலைக்கிடம்..
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
பலர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குருநகர் பகுதியில் இருந்து ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கடலில் விபத்துக்கு உள்ளானதில், படகில் இருந்த பலரும் கடலினுள் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது, படகில் பயணித்தவர்கள் எண்னிக்கை தெரியாத நிலையில் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் அப்பகுதி கடற்தொழிலாளர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்