சுவிஸ் - செங்காளனின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்!
சுவிட்சர்லாந்தின் பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா செங்காலனின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த இவர் நீண்டகாலமாக பசுமைக் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று செங்காலனின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள துரைராஜா, என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.
போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது என்று கூறிய அவர், இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம் எனவும் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்