நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள்!
வடமேற்கு நைஜீரியாவில் 03 தனித்தனி தேவாலயங்களில் ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் துப்பாக்கிதாரிகளால் கடத்திச் செல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
“நேற்றைய நிலவரப்படி, 177 பேர் காணாமல் போயிருந்ததாகவும், அவர்களில் 11 பேர் திரும்பி வந்த நிலையில், ஏனையவர்கள் துப்பாக்கிதாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் எவ்வித விளக்கங்களையும் அளிக்கவில்லை.
அதேநேரம் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் பொதுவானவையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்