பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை எங்கே? - எதிரணி பதில் கூற வேண்டும்!!

#SriLanka #Parliament #Harini Amarasooriya #Bimal Ratnayake #No-confidence motion
Thamilini
2 hours ago
பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை எங்கே? - எதிரணி பதில் கூற வேண்டும்!!

“பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு   எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை எதிரணி அறிவிக்க வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி கையொப்பம் திரட்டுவதாக செய்திகள் வெளியாகின. குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தால் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாம் தயார்.

 நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டிவிட்டு, அதனை சமர்ப்பிக்காமல் இருப்பது பாரதூரமான பிரச்சினையாகும். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதை எதிரணி தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கு அவர்களின் நிலைப்பாடு முக்கியமாகும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!