மலேசியாவில் மீசைய முறுக்கு 2 குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஹிப் ஹாப் தமிழா
2017ம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன் மற்றும் இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார்.
சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்க உள்ளார். இந்த திரைப்படமும் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட, இரு நண்பர்களை பற்றிய படம்தான்.
அந்த இருவரில் ஒருவராக நான் நடிக்கிறேன், இன்னொரு பாத்திரம் யார் என்றால், அவர் உண்மையிலேயே எனக்கு நண்பர், உண்மையிலேயே எனக்கு தம்பி; நடிக்கிறாயா என விளையாட்டாக கேட்டேன், உடனே சரி எனக் கூறினான், ஹர்ஷத்கான் தான் அது" என்று குறிப்பிட்டுளளார்.
(வீடியோ இங்கே )