இலங்கையின் தேயிலையை ஈரான் தொடர்ந்து கொள்வனவு செய்யுமா? தூதர் விளக்கம்!
#SriLanka
#Tea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரிகளை விதிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இலங்கைக்கான ஈரானிய தூதர் டாக்டர் அலிரேசா டெல்கோஷ், விளக்கமளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இலங்கை தேயிலையை ஈரான் தொடர்ந்து கொள்வனவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில், அவர்களின் தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஈரான் போன்ற பெரிய நாடுகளுடனான அதன் மிகப் பழமையான உறவுகளைப் பேணுவதில் இலங்கை மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்