காலி முகத்திடலில் மின் கம்பத்தில் ஏறி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபர்!
#SriLanka
#Police
#Protest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
கொழும்பு காலி முகத்திடல் வீதியில் உள்ள மின்சாரக் கம்பம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர் இன்று நூதன போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
களனி காவல்துறையினரால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மின்சாரக் கம்பத்தின் உச்சியில் ஏறியதுடன், தனது கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை பாதுகாப்பாக மீட்டு முதலுதவி வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.