பல இடங்களில் கைவரிசை காட்டிய திருடன் பொலிஸாரால் கைது!
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி தங்க நெக்லஸ்களைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொரட்டுவ, ராவதவத்தையைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் "மொரட்டுவ முத்துவ" என்றும் அழைக்கப்படும் சந்தேக நபர், மொரட்டுவ, கொட்டாவ, பிலியந்தல, எகொட உயன மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளில் பெண்களிடமிருந்து தங்க நெக்லஸ்களைத் திருடி, பின்னர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் 7,500 மில்லிகிராம் ஹெராயின் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சந்தேக நபர் கடந்த ஆண்டு மொரட்டுவவில் உள்ள ஒரு நகைக் கடைக்கு நகைகளை வாங்கும் போலிக்காரணத்தில் சென்று 1 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களைத் திருடி தப்பிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.