யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான சாலையில் கோர விபத்து - இருவர் பலி!
#SriLanka
#Jaffna
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான சாலையில் தென்மராட்சியின் நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று, அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஒருவரின் உடல் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையிலும், மற்றொருவரின் உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.