பிரித்தானியாவில் அவமதிக்கப்பட்ட ஈழத்தமிழன் பிரபல பாடகர் வாகீசன்!
பிரித்தானியா தமிழர் பேரவை - BTF மற்றும் ஈழத்தமிழர் வர்த்தகசங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித்தானியா பாராளுமன்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கெளரவிப்பதற்காக இந்திய உலகப்புகழ் பெற்ற பியானோ இசைக்கருவி வித்தகரான லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி திருக்குறள் காவியத்தின் இசை வெளியீட்டுக்காகவும், ஈழத்தமிழ் பிரபல பாடகருமான வாகீசன் இராசையா அவர்களும் அவரது குழுவினரும் பிரித்தானியாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பிரித்தானியாவில் இந்த நிகழ்வானது 13.01.2026 செவ்வாய்க்கிழமை 6 மணியளவில் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரித்தானியா தமிழர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அழைக்கப்படிருந்த லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி திருக்குறள் காவியத்தின் இசை வெளியீட்டுக்காக பாராளுமன்றத்திற்குள் அழைத்து சென்று கெளரவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஈழத்தமிழ் பிரபல பாடகருமான வாகீசன் இராசையா அவர்களும் அவரது குழுவினரும் பிரித்தானியாவிற்கு வந்திருந்த போதிலும் அவர்கள் பாரளுமன்றம் வரை அழைத்து செல்லப்பட்டு உள்ளே செல்லாமல் வாசலில் வைத்தே திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
ஈழத்தமிழர் வர்த்தகசங்கத்தினரால் உள்ளே அழைத்து செல்வதற்கு ஏராளமான முயற்சிகள் செய்யப்பட்ட போதிலும் பாராளுமன்றத்துக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, இந்த விழாவினை சிறப்பிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் சிறார்களின் நடனங்கள், பாடல்களிற்காக வருகை தந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர், இது மட்டுமன்றி சில கெளன்சிலர்ஸ் (Councilors), முக்கிய தமிழ் பிரமுகர்கள் அனைவரும் அனுமதி பத்திரங்கள் இருந்த போதிலும் இந்த நிகவிற்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் அனைவரும் வெளியே காத்து இருந்து நேரம் தாமதமானதால் வெளியே வீதியில் இருந்து பொங்கல் சாப்பிட்டி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஈழத்தமிழனான வாகீசனை இந்திய தமிழர்கள், கேரளா மக்கள் கொண்டாடுவதனைப்போல் ஈழத்தமிழ் மக்கள் ஏன் கொண்டாட மறுக்கிறார்கள்?
இது தொடர்பாக ஏற்பாட்டாளர்களை (பிரித்தானியா தமிழர் பேரவை - BTF) பலர் கேட்ட போது சரியான பதில்களினை வழங்கவில்லை என அறிகின்றோம். ஈழத்தமிழர்களிற்கான அரசியல் அமைப்பாக செயற்பட்டு வருபவர்கள் ஈழத்தமிழ் கலைஞர்களினை அவமதிப்பது நியாயமா? மக்கள் இதற்கான தீர்வுகளினை தேடாவிடின் ஈழத்தினை சூறையாடுவதினை யாராலும் தடுக்க முடியாது..
மேலதிக விபரங்கள்
https://x.com/tamilsforum/status/2011703107760374200