யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா!

#SriLanka #Festival
Mayoorikka
2 hours ago
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா!

தேசிய தைப்பொங்கல் விழா இன்று (15) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

 இன்று பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

 இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

 நாட்டில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு அறுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நாடே ஒன்றாக”தேசிய செயற்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனவரி 16ஆம் தேதி பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

 ஜனவரி 16 அன்று நடைபெறவுள்ள இந்த விசேட திட்டத்தின் மூலம், போதைப்பொருள் பரவலால் ஏற்படும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து வடக்கு மாகாண மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன், இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நேர்மறையான பங்களிப்பை பெற்றுக்கொள்வதும், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!