அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கழுகுப் பார்வை கிரீன்லாந்தின் பக்கம் திரும்பியது ஏன்!

#America #world_news
Mayoorikka
1 hour ago
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கழுகுப்  பார்வை கிரீன்லாந்தின் பக்கம் திரும்பியது ஏன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள, கனிம வளங்கள் நிறைந்ததும் மக்கள் தொகை குறைந்ததுமான கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். 

இது தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமான பகுதி என அவர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தைச் சுற்றி ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்காவுக்கு அந்தப் பகுதி அவசியம் எனவும் கூறினார்.

 பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு வழிகளில் ராணுவ நடவடிக்கையும் ஒன்று என்றாலும், ஒரு நேட்டோ உறுப்பு நாடு மற்றொரு நாட்டின் மீது நடத்தும் தாக்குதலாக இது அமையும் என்பதால், இது நேட்டோ கூட்டமைப்புக்கு ஒரு மிக மோசமான கனவாகவும், ஒருவேளை அந்த அமைப்பின் இருப்புக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

 கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். அதற்கான எவ்வித ஆதாரமும் இன்றி, "அங்கு எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நிலவியல் ரீதியாகப் மிகப்பெரியதாக இருந்தாலும், கிரீன்லாந்தின் மக்கள்தொகை சுமார் 58,000 மட்டுமே. இதில் மூன்றில் ஒரு பங்கினர் தலைநகரான நூக்கில் வசிக்கின்றனர். மற்றவர்கள் பெரும்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

 இந்தத் தன்னாட்சிப் பகுதிக்கு எனத் தனி ராணுவம் கிடையாது, அதன் பாதுகாப்புக்கு டென்மார்க் தான் பொறுப்பு. ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவைப் பாதுகாக்க டென்மார்க்கிடம் அங்கு குறைவான விமான மற்றும் கடற்படை வசதிகளே உள்ளன.

 அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இது அமைந்துள்ளதால், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை நிறுவ இது மிக முக்கியமான இடம்.

 இங்கு தங்கம், வைரம், யுரேனியம் மற்றும் அரிய வகை தாதுக்கள் அதிகளவில் உள்ளன. இவை அனைத்துமே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன் பக்கம் கிரீன்லாந்து பக்கம் திரும்பக் காரணம்

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!