திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை நிறுவ முயன்ற விவகாரம் - பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்!
திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குகள் உட்பட 08 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த 08 பேரையும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் இருந்து சிலையை அகற்ற அதிகாரிகள் முயற்சித்ததைத் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சிலை கட்டுமானம் அங்கீகரிக்கப்படாதது என்று கூறி கடலோர பாதுகாப்புத் துறை முன்பு காவல்துறையில் முறைப்பாடு அளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து சிலையை அகற்ற காவல்துறை அதிகாரிகள் முயன்றபோது, பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்