யாழ்ப்பாணத்தில் உள்ள மௌபிம ஜனதா கட்சி அலுவலகம் தீக்கிரை!
#SriLanka
#Accident
#fire
Thamilini
1 hour ago
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள மௌபிம ஜனதா கட்சி அலுவலகம் நேற்று (13) நள்ளிரவு ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட தலைமை அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் கட்சி அலுவலகம் அமைந்துள்ள வீடு மற்றும் கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. கட்டிடத்தின் ஒரு பகுதி தீவிபத்தில் சேதமடைந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்