தைத்திருநாளை முன்னிட்டு நாட்டில் சூடு பிடித்துள்ள மண் பானை விற்பனை!
#SriLanka
#Festival
Mayoorikka
3 hours ago
தமிழர்களின் பாரம்பரிய தைத்திருநாளில் மண்பானைப் பொங்கல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் இம்முறை அதிக மக்கள் மண்பானையின் மகத்துவத்தை உணர்ந்து அதனைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிகளவு கோலம் இடப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகளை இன்று புத்தளம் உடப்பு மக்கள் கொள்வனவு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஒவ்வொரு பானையும் 300 ரூபாய் தொடக்கம் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கல்வியங்காட்டில் நீண்டகாலமாக மட்பாண்ட தொழிலில் ஈடுபடும் தம்பதியினரின் கடையிலும் தொழிற்சாலையிலும் அதிகளவு வர்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகளை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.