சமத்துவமான கல்வியை வழங்கும் நாடுகளில் இலங்கை: பிரதமர் ஹரிணி

#SriLanka #education #Harini Amarasooriya
Mayoorikka
3 hours ago
சமத்துவமான கல்வியை வழங்கும் நாடுகளில் இலங்கை:  பிரதமர் ஹரிணி

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பிள்ளைகளுக்கு சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும் நாடுகளாகக் கருதப்படலாம் எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். 

 சீன அரசாங்கத்தினால் பாடசாலை சீருடைக்காக இலவசமாகத் துணிகளை வழங்கும் திட்டத்தில் இன்று (13) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 நாட்டின் கல்வித் தரத்தைப் பேணுவதற்கு சீன அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு ஒரு பாரிய பலமாகும் எனவும், இதன் மூலம் நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் சமத்துவத்துடன் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

 அத்துடன், தொடர்ச்சியாகப் பல வருடங்களாக பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்குவதாக சீனா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையைத் தெளிவாக வெளிப்படுத்தும் ஒரு விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இலங்கை எதிர்நோக்கும் ஒவ்வொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தைரியம் அளிப்பதாகத் தெரிவித்த பிரதமர், முழு இலங்கை மக்களின் சார்பாக இந்த பாடசாலை சீருடைத் துணித் தொகுதியை அன்பளிப்பு செய்தமைக்காக சீன அரசாங்கத்திற்குத் தனது நன்றியையும் தெரிவித்தார். கல்வி சார்ந்த இந்த ஒத்துழைப்பானது, வரும் காலங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இங்கு சீன மக்கள் குடியரசினால் முழுமையான ஒரு நன்கொடையாக 11.484 மில்லியன் மீற்றர் சீருடைத் துணிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த சீருடைத் துணிகள் 5 கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதுடன், தற்போது வரை 3 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளன. குறித்த பாடசாலை சீருடைத் துணிகளை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி சென்ஹொங் (HE Qi Zhenhong) அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. 

 இம்முறை பாடசாலை சீருடைத் துணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 4,418,404 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், எதிர்வரும் 2026.01.19 ஆம் திகதி முதல் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அந்த துணிகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 2026 ஆம் ஆண்டிற்குத் தொடர்புடையதாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கும் திட்டத்தின் கீழ், அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், தீவு முழுவதிலும் உள்ள அரச அங்கீகாரம் பெற்ற பிரிவெனாக்களில் கற்கும் மாணவர்களுக்கும் இலவசமாக பாடசாலை சீருடைகளை வழங்கும் நடவடிக்கை இந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

 இந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர் ஷி சென்ஹொங், பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நீண்டகாலமாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே அசைக்க முடியாத உறவு நிலவி வருவதாகவும், இலங்கையின் கல்வியை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்திலும் செய்யக்கூடிய அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

 இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!