வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 2500 வீடுகளை கட்டுவதற்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 hour ago
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 2500 வீடுகளை கட்டுவதற்கான  ஒதுக்கீட்டில் மாற்றமில்லை!

நாட்டில் 2009 யுத்தம் நிறைவடைந்தாலும் யுத்தத்தினால் வீடுகளை இழந்த பெருமளவானவர்கள் வடக்கில் இடம்பெயர் முகாங்களிலும் சிறு குடிசைகளிலும் இன்றும் தங்கியுள்ளனர். 

2500 வீடுகளை கட்ட வரவு செலவுத் திட்டத்தில் 5 000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. நாம் அதனை மாற்றவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற ' ‘Rebuilding Sri Lanka ' தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு செலவுத் திட்ட உத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதற்காக மேலதிக நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு பெறுவது என்ற சவாலுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதன் பிரகாரம் சில சட்டங்கள் மற்றும் கட்டளைகளின் வாயிலான உள்ள அதிகாரம் மற்றும் மக்களின் ஆணையை பயன்படுத்தினோம். 

நாம் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டுள்ளோம். எந்த அமைப்பின் அழுத்தத்திற்கும் எமது மக்கள் ஆணையை விட்டுக் கொடுக்கமாட்டோம்.

 இந்த அனர்த்தத்திற்காக மாத்திரம் செலவிட 500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணையை முன்வைத்தோம். மேலும் தேவையானால் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில பிரதேசத்திற்குரிய முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை செலவிட முடியும்.நாம் தயாரித்துள்ள நீண்ட காலத் திட்டத்தை மாற்றாமல் இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். அனர்த்தத்தின் ஆரம்பத்தில் மக்களை மீட்கும் சவாலை எதிர்கொண்டோம். சுமாராக 7 இலட்சம் குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டனர். 

24 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 6 000 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. 110 000 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. சேதமடையாத ஆனால் குடியிருக்க பொருத்தமற்றவை என 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேலும் அடையாளங் காணப்படுகின்றன. மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டும். 2026 வரவு செலவுத் திட்டத்தில் 31 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டோம். குறிப்பாக 2009 யுத்தம் நிறைவடைந்தாலும் யுத்தத்தினால் வீடுகளை இழந்த பெருமளவானவர்கள் வடக்கில் இடம்பெயர் முகாங்களிலும் சிறு குடிசைகளிலும் தங்கியுள்ளனர். 2500 வீடுகளை கட்ட வரவு செலவுத் திட்டத்தில் 5 000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

 நாம் அதனை மாற்றவில்லை. அதே போன்று கிராமங்களில் பொருளாதார நெருக்கடிகளுடன் உள்ள மக்களுக்காக கிராமத்தவரின் உதவுயுடன் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்த வருடத்தில் 10 000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 10 ஆயிரம் மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம்.10 இலட்சம் நிதி அனுசரணை மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் 10000 வீடுகள் நிர்மாணிக்கப்படும். அவை அனைத்தையும் ஒன்றிணைத்தால் 2026 இல் சுமார் 50 000 ற்கும் அதிகமான வீடுகளை கட்ட வேண்டியுள்ளது. இந்த அனர்த்தம் தொடர்பில் உலக வங்கி அடிப்படை மதிப்பீடொன்றை தயாரித்துள்ளது.

 4.1 பில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எமது திட்டங்களின் மொத்த மதிப்பீடு சுமார் 2.8 பில்லியன் டொலர்களாகும். உலக வங்கி சொன்ன தொகை இது. இணையத்தில் இருக்கும் தொகை இவ்வாறு உள்ளது என கேள்வி எழுப்பலாம். இது வரை அடையாளங் கண்டுள்ள திட்டங்களின் படி 2.8 பில்லியன் என மதிப்பிட்டுள்ளோம். 

இன்னும் திட்டங்கள் அடையாளங் காண வேண்டும். அழிவின் அளவை விட அழிவிற்கான செலவையே மதிப்பிட்டுள்ளோம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!