இலவச பாடசாலை சீருடைத் துணிகளுடன் வந்த 3 சீனக் கப்பல்கள்!
#SriLanka
Mayoorikka
1 hour ago
அரச மற்றும் அரச நிவாரணம் கிடைக்கப்பெறும் பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள அரச அங்கீகாரம் பெற்ற பிரிவெனாக்களின் பிக்குமார்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகள் வழங்குவதை இந்த மாதம் மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.
சீன அரசாங்கத்தினால் 11.484 மில்லியன் மீற்றர் சீருடை துணி இலவசமாக நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சீருடை துணிகள் 5 கப்பல்கள் ஊடாக நாட்டிற்கு கிடைக்கப்பெறும். இதில் 3 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளன.
இவற்றை பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பிற்பகல் சீன தூதுவரின் தலைமையில் இடம்பெற்றது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்