கல்வி மறுசீரமைப்பு 2027 இற்கு ஒத்திவைப்பு!
6ம் தர கல்வி மறுசீரமைப்பை மீண்டும் மீளாய்வு செய்து 2027ல் அதனை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும் முதலாம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு இந்த வருடத்தில் திட்டமிட்டதற்கமைய நடைமுறைக்கு வருமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 6ம் தரத்தின் ஆங்கில பாடத்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் கல்வியமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பெறுபேறுகளுக்கமைய தேசிய கல்வி நிறுவன கட்டுப்பாட்டு சபை மூலம் குறித்த சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 1 மனித வள அபிவிருத்தி
2 அடிப்படை வசதிகள் அபிவிருத்தி மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு
3 கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு பணிகள்
4 பாடவிதான அபிவிருத்தி
5 பொதுமக்களின் தெளிவு மற்றும் மேம்பாடு ஆகிய ஐந்து பிரதான விடயங்களுக்கமைய கல்வி மறுசீரமைப்பு அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்