விமலின் சத்தியாக்கிரகப் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை தொடங்கிய தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பாக கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டம், புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நீதிமன்ற உத்தரவில் உயர்தரப் பரீட்சைகள் தற்போது அந்தப் பகுதியில் நடைபெற்று வருவதால், போராட்டக்காரர்கள் சாலையைத் தடுக்கக் கூடாது என்றும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்