ஆண்டின் முதல் 08 நாட்களில் 67 இற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
#SriLanka
Mayoorikka
3 hours ago
2026 ஆம் ஆண்டின் முதல் 08 நாட்களில் 67,762 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதன்படி, முதல் 08 நாட்களில் 11,367 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் ரஷ்யா காணப்படுகிறது. 8425 பேர் வருகை தந்துள்ளனர்.
ஜேர்மனியிலிருந்து 5306 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.