இலங்கையின் முதலாவது அனிமேஷன் திரைப்படம்: முன்னோட்ட காட்சி வெளியீடு
இலங்கையின் முதலாவது அனிமேஷன் திரைப்படமான "The Secret of the Moonstone" இன் முன்னோட்டக் காட்சியை (Trailer),Mogo Studios வெளியிட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளதாக Mogo Studios அறிவித்துள்ளது. Mogo Studios இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முதற்தர விருது பெற்ற அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும்.
இந்த ஸ்டுடியோவானது அனிமேஷன், விளையாட்டு உருவாக்கம் மற்றும் அது சார்ந்த துறைகளில் டிப்ளோமா பாடநெறிகளை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான Mogo Media Academy உடன் இணைந்து செயற்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கையில் முதலாவதாக அனிமேஷன் திரைப்படத்தை குறித்த நிறுவனம் தயாரித்துள்ளது.
குழந்தைகள், சிறுவர்கள், பெரியோர்கள் என்ற வரையில் அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் திரைப்படம் தயாராகியுள்ளது. திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை தற்போது Mogo Studios வெளியிட்டுள்ளது.
அதில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் வகையில் திரைப்படக் காட்சிகள் காணப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில் திரைப்படம் முழுவதையும் காண ஒட்டுமொத்த ரசிகர்களும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்