யாழில் கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்: தடுத்து நிறுத்த அழைப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் இரு பகுதிகளில் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் காணி சுவீகரிப்படவுள்ளதாகவும் இந் நடவடிக்கையை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய பேரவையின் சார்பிலான ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி உப செயலாளருமானநிரஞ்சினி ஜெலஸ்ரனிஸ்லாஸ் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான 2 பரப்பு காணி, எதிர்வரும் 20ஆம் திகதி காலை 09 மணிக்கு இலங்கை கடற்படையின் சுவீகரிப்படவுள்ளது.

அதேபோன்று, எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 09 மணிக்கு, எழுவைதீவு மூன்றாம் வட்டாரத்தில், பொதுமனுக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி, கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு, இதே காணிகளை கடற்படையினருக்காக அபகரிக்க முயன்றபோது, தீவுப் பகுதியை சேர்ந்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், எழுவைதீவு மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்தனர்.
ஆகவே இந்த பலாத்கார நடவடிக்கையை தடுத்து நிறுத்துதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்