தையிட்டி காணிகளை விடுவிக்க முடியாது என்று எவரும் கூறவில்லை! சந்திரசேகர்

#SriLanka
Mayoorikka
3 hours ago
தையிட்டி காணிகளை விடுவிக்க முடியாது என்று எவரும் கூறவில்லை! சந்திரசேகர்

"யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க முடியாது என்று எவரும் தெரிவிக்கவில்லை." - இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

 திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காகக் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில், காணிகளை விடுவிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் நம்பகரமாகக் கிடைத்த தகவலுக்கு அமைய வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

 "காணிகளை விடுவிக்க முடியாது என எவரும் கூறவில்லை. விரைவில் அடுத்தகட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் மாதம் அந்தக் கலந்துரையாடல் இடம்பெறும்." - என்று அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!