பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது திட்டமிட்ட பெண்ணிய தாக்குதலுக்கு கண்டனம்!

#SriLanka #Harini Amarasooriya
Mayoorikka
9 hours ago
பிரதமர்  ஹரிணி அமரசூரிய  மீது திட்டமிட்ட பெண்ணிய தாக்குதலுக்கு கண்டனம்!

NPPயின் குறைபாடுகளை கூற ஓர் பலமான கொள்கை மிக்க எதிர்கட்சி அவசியம் என்று தேர்தல் காலங்களில் பேசிக்கொண்டிருந்தோம். 

அதற்கான காரணம் NPPயின் பெரும் பலமாக வக்கற்ற எதிர்கட்சிகள் இருக்கின்றன. இன்று பிரதமர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே அதற்கான சான்றுகள். LGBTQ தொடர்பான முன்னைய தனிப்பட்ட நிலைப்பாடுகளை, பல முக்கிய நிலைப்பாடுகளைப் போல இவர்கள் தங்கள் அரசாட்சிக்குள் கொண்டுவரவில்லை. இன்று அரசை எதிர்க்க கொள்கை ரீதியான விடயங்களை கையில் எடுக்க முடியாதவர்கள் திணறுகின்றார்கள்.

 மங்கள சமரவீர தன்னை ஓரினச்செயற்கையாளர் எனத் தெரியப்படுத்தித் தான் அத்தனை ஆண்டுகால அரசியலில் இருந்தார் அதே போல் ரணிலை அப்படி சொல்லி திட்டுவார்கள் ஆனால் அவர்களின் அரசியலை கேள்விக்குட்படுத்தவில்லை.

 பிரதமர் ஹரினி ஒரு பொழுதும் குறிப்பிடாத விடயத்தை வைத்து அவரை அவதூறு செய்வது தவறு. ஹரினி அமரசூரிய பிரதமராக பொறுப்பு ஏற்கும் முன்னர், அவரைச் சுற்றி உருவான அரசியல் பார்வை ஒரு தனித்துவம் கொண்டது. 

அவர் அரசியலுக்குள் நுழைந்தது அதிகாரத்தின் வாசலூடாக அல்ல. சமூகத்தின் அடித்தளங்களில் இருந்து வளர்ந்த ஒரு அரசியல் குரலாகவே அவர் அறியப்பட்டார். கல்வி துறையிலும், பெண்கள் உரிமை செயல்பாடுகளிலும், சமூக நீதி பேசும் வெளிகளிலும் நீண்ட கால அனுபவத்துடன் அவர் பேசத் தொடங்கினார். 

அரசியல் குடும்ப பின்னணியும் இல்லை. அதிகாரத்தை பிடிக்க அவசரமும் இல்லை. அதனால் தான் அவர் பேசிய மொழியில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. ஜனநாயகம், கருத்து வெளிப்பாட்டு உரிமை, எதிர்ப்பு உரிமை போன்ற விடயங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் பாதுகாப்பான காலத்தில் உருவானவை அல்ல. பேசினால் விமர்சனம் வரும், தனிமைப்படுத்தப்படுவோம் என்ற சூழலில் தான் அவை வெளிப்பட்டன. 

அடக்குமுறை அரசியலை அவர் கேள்வி கேட்டார். பொதுமக்கள் வாழ்வில் படை தலையீடு அதிகரிப்பதை இயல்பானதாக ஏற்கவில்லை. அதிகார துஷ்பிரயோகமும், அதற்கான தண்டனை இல்லாமையும் அவர் முன் நிறுத்திய முக்கிய பிரச்சினைகளாக இருந்தன.

 அதிகாரத்துக்கு வெளியே இருந்து இவ்வாறு பேசுவது தான் அரசியல் நேர்மை என பலர் கருதினர். பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்ற கடும் சட்டங்கள் குறித்து அவர் எடுத்த அணுகுமுறையும் கவனம் பெறத்தக்கது. பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒதுக்கப்படக் கூடாது என்ற கருத்தை அவர் தொடர்ச்சியாக முன்வைத்தார்.

 காரணமற்ற கைது, கண்காணிப்பு, அச்சுறுத்தல் அரசியல் ஆகியவை சாதாரண நடைமுறையாக மாற்றப்படுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலைப்பாடு, அவருடன் முழுமையாக உடன்படாதவர்களுக்கும் கூட, இவர் சொன்னதை மாற்றி பேசாதவர் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. இன பிரச்சினைகளில் அவர் எடுத்த அணுகுமுறை முக்கியமானது. தமிழ், முஸ்லிம் மக்களின் குறைகள் தனிப்பட்ட பிரச்சினைகள் அல்ல; அது அரச கட்டமைப்புகளில் உள்ள நீண்டகால அநீதியின் விளைவு என அவர் தெளிவாக கூறினார். 

பெரும்பான்மை ஆதிக்க அரசியல் பற்றி அவர் மௌனம் காக்கவில்லை. அதே நேரத்தில், இன பிரச்சினைகளை பயம் ஏற்படுத்தும் சொற்களால் மூடி மறைக்கும் அரசியல் மொழியையும் அவர் பயன்படுத்தவில்லை. 

இந்த நேர்மை தான் பல சமூகங்களில் அவரது குரல் கேட்கப்பட காரணமாக அமைந்தது. பெண்கள் உரிமை குறித்த அவரது பேச்சும் செயலும் அலங்கார அரசியல் அல்ல. பெண்களுக்கு எதிரான வன்முறை, ஆண் ஆதிக்க அரச அமைப்புகள், முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற விடயங்களை அவர் சமூக பிரச்சினைகளாக மட்டும் அல்ல, அரசியல் பிரச்சினைகளாகவே முன்வைத்தார்.

 பெண்கள் உரிமை என்பது அவருக்கு ஒரு முழக்கம் அல்ல; அது அரசியலின் மையம். அதனால் தான் அவர் பிரதமராக பொறுப்பு ஏற்ற போது, அடக்குமுறை குறையும், ஜனநாயக அமைப்புகள் வலுப்பெறும், பாதுகாப்பு சட்டங்கள் மீளாய்வு செய்யப்படும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் பேசப்படும் என்ற நம்பிக்கை உருவானது. 

அந்த நம்பிக்கை விளம்பரங்களால் உருவானது அல்ல. அவர் பிரதமராக மாறுவதற்கு முன் எடுத்த நிலைப்பாடுகளால் உருவானது. இன்றைய நிலையில் அவரின் சொந்த சிறந்த நிலைப்பாடுகளைக் கூட வெளியில் கூற முடியாத நிலையில் அவர் சிக்கியுள்ளார் அல்லது மாறியுள்ளார்.

 செய்தி

 முக நூல்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!