இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 10 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கிய லண்டன் தொழிலதிபர்!
#SriLanka
#London
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#‘Rebuilding Sri Lanka
Thamilini
12 hours ago
டிட்வா சூறாவளி (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், இந்த இயற்கை பேரழிவால் சீரழிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கவும் லண்டன் தொழிலதிபர், திரு. வேலுப்பிள்ளை சிவசுந்தரம் நிதியுதவி அளித்துள்ளார்.
“இலங்கையை மீளமைக்கும்” திட்டத்திற்காக அவர் 10 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். குறித்த நிதியானது இன்று (11.01) ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமணாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை சிவசுந்தரம் இங்கிலாந்தில் செயல்படும் வெஸ்டர்ன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்தின் நிறுவனரும் ஆவார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்