திருகோணமலையில் ஆட்டை மீட்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
திருகோணமலை -குச்சவெளி பகுதியில் மின்சாரம் தாக்கியமையால் சிறுவனொருவன் ஆபத்தான நிலையில் இன்று (10) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குச்சவெளி சல்லிமுனை என்ற இடத்தில் நபர் ஒருவர் தோட்ட காணிக்கு மின்சாரத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் குறித்த சிறுவன் அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்சார கம்பியில் சிக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை மின்சார கம்பியில் சிக்குண்ட குறித்த சிறுவனை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்