புதிய கல்வி சீர்த்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லாமல்போகும் - சஜித் விமர்சனம்!

#SriLanka #Sajith Premadasa #Ministry of Education #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
15 hours ago
புதிய கல்வி சீர்த்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லாமல்போகும் - சஜித் விமர்சனம்!

"நமது நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 'இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பாரிய பொதுக் கூட்டம் நேற்று (10) களுத்துறை, மத்துகம நகரில் அமைந்துள்ள இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது நாட்டின் எழுத்தறிவு, பொருளாதார வளர்ச்சி, தாய்-சேய் இறப்பு விகிதக் குறைவு மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பு ஆகிய அனைத்துக்கும் இலவசக் கல்வியே காரணமாகும். அன்று கன்னங்கர இலவசக் கல்வியைக் கொண்டுவர முயன்றபோது, 'தோட்டங்களில் தேங்காய் பறிக்க ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள்' எனப் பிரபு வர்க்கத்தினரும், பெரும் முதலாளிகளும் எதிர்த்தனர். அந்தத் தடைகளையெல்லாம் தாண்டித்தான் நமக்கு இலவசக் கல்வி கிடைத்தது. அதனைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். 

 கல்வியைப் புதுப்பிப்பது என்பது அதில் ஆபாசத்தைப் புகுத்துவது என்று அர்த்தமல்ல. இணையவழி கல்வியில் ஆபாசமான விடயங்களை அணுகுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமே தவிர, சீர்திருத்தம் என்ற பெயரில் ஆபாசத்தை அறிமுகப்படுத்தக் கூடாது. இதற்கு எதிராக மக்கள் இன்று அணிதிரண்டுள்ளனர். தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப்போக்கை நாட்டின் தேசியக் கொள்கையாக மாற்ற முடியாது. 

சீர்திருத்தங்களை முன்மொழிபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாது. வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் 'ஸ்மார்ட் போர்ட்' (Smart Board), கணினி வசதிகள் கிடைத்தால் போதாது. 41 இலட்சம் மாணவர்களுக்கும் அந்த உரிமை கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!