அனைவரும் அவசியமாக படிக்க வேண்டிய முக்கியமான பொலிஸ் தகவல்!

#SriLanka #Police
Mayoorikka
23 hours ago
அனைவரும் அவசியமாக படிக்க வேண்டிய முக்கியமான பொலிஸ்  தகவல்!

 பொலீஸ் துறையினால் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 குறிப்பாக இதை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 அனைவரும் அவசியமாக படிக்க வேண்டிய முக்கியமான பொலிஸ்தகவல்.

 முடிவுவரை படியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

 இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்: 

⭕ நகரங்களிலும் கிராமங்களிலும், இந்நாட்களில் பலர் போதுமான வருமானம் இல்லாத நிலை, வேலை இழப்பு, வியாபார பாதிப்புகள் காரணமாக, எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 1. வீட்டில் இருப்பவர்கள், குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் (ஆண்கள்/பெண்கள்) வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். 

2. விலை உயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம். 

3. விலை உயர்ந்த தங்க நகைகளை அணிவதை தவிர்க்கவும்; கைப்பைகளைக் குறித்து கவனமாக இருங்கள். 

4. ஆண்கள் விலை உயர்ந்த கடிகாரங்கள், வளையல்கள், சங்கிலிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். 

5. உங்கள் மதிப்புமிக்க கைபேசிகளை பொது இடங்களில் பயன்படுத்த வேண்டாம். 

 பொது இடங்களில் கைபேசி பயன்பாட்டை முடந்தவரை குறைக்க முயற்சிக்கவும். 

6. அறிமுகமில்லாத நபர்களை உங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டாம். 

7. தேவைக்கு அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம். 

8. பயணம் செய்யும் போது ATM மற்றும் கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

 9. உங்கள் பெற்றோர், துணைவர்/துணைவி மற்றும் குழந்தைகளை அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரியுங்கள்.

 10. கதவு மணி அடிக்கும்போது பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று பார்க்கவும்.

 இயன்றால், பார்சல்கள் அல்லது கடிதங்களை பெற முடியாத வகையில் கிரில் கதவுகளை பூட்டி வைக்குமாறு முதியவர்கள் மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

 11. குழந்தைகள் சீக்கிரமாக வீட்டிற்கு திரும்புமாறு அறிவுறுத்துங்கள். 

12. வீட்டிற்கு செல்லும் போது தனிமையான வீதிகள் அல்லது குறுக்குவழிகளை தவிர்க்கவும். முடிந்தவரை பிரதான சாலைகளை பயன்படுத்துங்கள். 

13. இளைஞர்களே, வெளியே செல்லும் போது சுற்றுப்புற சூழலை கவனமாக கவனியுங்கள்.

 14. அவசர தொலைபேசி எண்களை எப்போதும் கையிலே வைத்திருங்கள். 

15. பிற நபர்களிடமிருந்து பாதுகாப்பான இடைவெளியை பேணுங்கள். 

16. பலர் முகக்கவசம் அணிந்திருப்பதால், நபர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கலாம். 

17. வாடகை (கூலி) காப் சேவைகளை பயன்படுத்தும் போது, உங்கள் பயண இலக்கை பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பொறுப்பாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 

18. முடிந்தவரை அரசின் பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துங்கள். 

19. மிகுந்த நெரிசலுள்ள பேருந்துகளை தவிர்க்க முயற்சிக்கவும். 

20. தினசரி தேவைகளுக்காக காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மட்டுமே வெளியே செல்ல முயற்சிக்கவும். பிரதான சாலைகளை பயன்படுத்துங்கள்; பாழடைந்த வீதிகளில் தனியாக செல்ல வேண்டாம். 

21. வணிக வளாகங்கள், கடற்கரை மற்றும் பூங்காக்களில் நீண்ட நேரம் தங்குவதை தவிர்க்கவும். 

22. பெரியவர்கள் பயிற்சி அல்லது கூட்டங்களுக்கு செல்ல வேண்டியிருந்தால், குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். 

23. மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக் கொண்டு வாகனத்திலிருந்து இறங்க வேண்டாம். 

24. வாகனத்தில் ஏறியவுடன் உடனடியாக கதவுகளை பூட்டுங்கள். 

25. கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பாதசாரிகள் யாராவது வாகனத்தை நிறுத்தி பணம் கேட்பதாக இருந்தால், உடனடியாக போலிஸாருக்கு தகவல் கொடுக்கவும். அவரின் புகைப்படத்தை எடுத்து, எண் விவரங்களை வழங்குங்கள். 

நாம் அனைவரும் போக்குவரத்து சட்டங்களை கடைப்பிடிக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக இருந்து, நம்மையும் நமது சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும். 

குறைந்தது 3 மாதங்கள் அல்லது நிலைமை மேம்படும் வரை இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 இந்த தகவலை நீங்கள் நேசிக்கும் அனைவருடனும் பகிருங்கள். 

உங்கள் பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும், நாட்டுமக்களின் பாதுகாப்பிற்காக இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!