நீர் கொழும்பைச் சேர்ந்த நபர் போதைப்பொருளுடன் கைது!
பெரியமுல்ல - ஏத்துகல ரயில் கடவைக்கு அருகில் வாகன சோதனையின் போது, நீர்கொழும்பை சேர்ந்த 32 வயதுடைய நபர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் கஞ்சா, 1 கிராம் கொகைன் மற்றும் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் தங்குமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 29.24 கிராம் 'குஷ் கஞ்சா' மற்றும் 2.23 கிராம் அடையாளம் தெரியாத போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்