செம்மணிக்கு நீதி கிடைக்க போகிறதா? குற்றவாளி உதவுவாரா?

#SriLanka #Investigation #Semmani human burial
Prasu
18 hours ago
செம்மணிக்கு நீதி கிடைக்க போகிறதா? குற்றவாளி உதவுவாரா?

மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலக (OMP) அதிகாரிகள் இந்த வார இறுதிக்குள் சந்திக்கவுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் 1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பின்னணித் தகவல்கள்: சுயாதீன விசாரணை கோரிக்கை: செம்மணி விவகாரம் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மை வெளிப்பாட்டைச் செய்யத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இது தொடர்பில் சுயாதீன விசாரணையை வலியுறுத்தி அவரது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பு: கடந்த ஒக்டோபர் மாதம் சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய சத்தியக்கடதாசியின் பிரதிகள், ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் கையளிக்கப்பட்டுள்ளன.

தாமதமான சந்திப்பு: ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாதம் இவரைச் சந்தித்த அதிகாரிகள், மீண்டும் நவம்பர் இறுதியில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் இந்த வாரம் இந்த முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் புதைகுழிகள் தொடர்பான மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவருவதில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நன்றி

ARV LOSHAN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!