இலங்கை மத்திய வங்கியின் கொள்கை நிகழ்ச்சி நிரல் வெளியீடு - 05 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு!

#SriLanka #Central Bank #economy
Thamilini
19 hours ago
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை நிகழ்ச்சி நிரல் வெளியீடு - 05 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு!

2026 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திற்கான இலங்கை மத்திய வங்கியின் கொள்கை நிகழ்ச்சி நிரல், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4 முதல் 5 சதவீதம் வரை வளருமென மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

 தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களின் ஆதரவுடன் நாட்டின் இயல்புநிலை மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை மத்திய வங்கி பாராட்டியுள்ளதுடன், பேரிடர் தயார்நிலை மற்றும் நீண்டகால மீள்தன்மை தொடர்பான நடவடிக்கைகளுக்கு அவசரமாக முன்னுரிமை வழங்க வேண்டியதையும் வலியுறுத்தியுள்ளது.

 வெளிப்புற நடப்புக் கணக்கில் செலவை விட வரவு அதிகமாக இருப்பது, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நேர்மறை நிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன் காரணமாக சந்தையால் நிர்ணயிக்கப்படும் மாற்று விகிதம் குறைந்த நிலையற்ற தன்மையுடன் இருந்து, படிப்படியாக தேய்மானம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!