இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புக்கள்!

#SriLanka #Japan
Mayoorikka
1 day ago
இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புக்கள்!

இலங்கை இளைஞர் சமூகத்திற்கு ஜப்பானின் மின்சாரத் துறையில் (Electrical Sector) ஏராளமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கையெழுத்திடப்பட்டது.

 ஜப்பானின் Enterprise United Co-operative நிறுவனம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) ஆகியவற்றிற்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 ஜப்பான் சார்பாக அதன் தலைவர் கசுஹிரோ ஹன்சாகி (Kazuhiro Hanzaki) அவர்களும், இலங்கை சார்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் லால் ஹெட்டியாரச்சி அவர்களும் இதில் கையெழுத்திட்டனர்.

 இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் தேசிய தொழில் தகைமை (NVQ) பெற்ற மின்சாரத் துறை தொழிலாளர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

 20 முதல் 28 வயதிற்குட்பட்ட, க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்ற இளைஞர்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 ஜப்பானிய மொழி தெரிந்திருப்பது கூடுதல் தகைமையாகும். எனினும், தெரிவு செய்யப்படுபவர்களுக்குத் தேவையான மொழிப் பயிற்சியை வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்துள்ளது. 

ஜப்பானிய மொழி மற்றும் தொழிற்பயிற்சிகள் தேசிய இளைஞர் சேவைகள் சபையின் சபுகஸ்கந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.

 தேசிய இளைஞர் சேவைகள் சபை, தொழிற்பயிற்சி அதிகார சபை, NAITA, VTA மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வேலைவாய்ப்பு வங்கியில் பதிவு செய்துள்ள தகுதியானவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்படுவார்கள்.

 அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும்.

 இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சுதத் யாலேகம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!