இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை: காரணம் இதுதான்....

#SriLanka #Sri Lankan Army #IndianArmy #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
21 hours ago
இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை: காரணம் இதுதான்....

பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் சவால்கள் குறித்து ஆராய்தல். 

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி இலங்கையின் சிரேஷ்ட இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல். இரு இராணுவங்களுக்கு இடையிலான பயிற்சிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

இரு இராணுவங்களுக்கு இடையிலான தொழில்முறை தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

                                                                                 

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!