இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் - பிரபல வைத்தியரின் மகள் மீது குற்றச்சாட்டு!
இரண்டு இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தொடர்புடைய குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
தொடர்புடைய வழக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, சந்தேக நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
பின்னர், குற்றப்பத்திரிகைகள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”